மஞ்சள் காமாலை விரைந்து குணமாக!
மாதுளம் பழச்சாறு தயாரித்து அதை ஒரு இரும்புச் சட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பிறகு பருகி வரவேண்டும். பத்து நாட்கள் இதே முறையில் தயாரித்து இரும்புச் சட்டியில் வைத்திருந்து பருகி வந்தால் மாதுளம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ முதலியவற்றால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலம் பெறும். இல்லையெனில் காலை நேரத்தில் இரண்டு மாதுளம் பழங்கள் சாப்பிடலாம். இவற்றில் உள்ள உயர்தரமான ஆர்கானிக் அமிலம் உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடியாக சக்தியை வழங்கிவிடும். தாது உப்புக்களும் வைட்டமின் ஏயும் கல்லீரலைக் குணமாக்கும். இதனால் மஞ்சள் காமாலை நோய் விரைந்து குணமாகும். மஞ்சள் காமாலை நோய்க்கு வேறு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளும் போதும் மாதுளம் பழங்களும், இளநீரும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை விரைந்து குணமாகும்.மீன் சாப்பிடலாம்!
ஜப்பானிய மக்கள் ஆண்டு தோறும் எட்டு இலட்சம் டன் எடையுள்ள மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிடுகின்றனர். கடல் உணவு வகைகள் சாப்பிடுவதில் இன்று ஜப்பானியர் தான் முதலிடத்தில் உள்ளனர். கடல் உணவுகளில் உள்ள துத்தநாக உப்பால் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கூடி இரத்தத்தில் கொலாஸ்டிரல் உயர்வு குறைக்கப்படுகிறது. மீன் அதிகம் சாப்பிட்டாலும் இரத்தக் கொதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இதயத்திற்கு இதமாக மீன் உணவு இருக்க அன்றைய தினம் பசலைக்கீரை, அவரைக்காய், காலிஃபிளவர் போன்றவற்றில் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜப்பானியர்கள் சோயா மொச்சையையும் மீன் உணவுடன் சேர்த்துக் கொள்கிறார்கள். இதனால், மீனிலிருந்து போதுமான அளவே துத்தநாக உப்பு உடலில் உறிஞ்சப்படுகிறது. மீதி வெளியேற்றப்படுகிறது. ஆக, மீன் உணவையும் சத்தாகப் பயன்படுத்திக் கொள்ள காய்கறி ஒன்றும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
ஞாபகசக்தி அதிகரிக்க!
No comments:
Post a Comment