Wednesday, August 18, 2010

உடல் பருமனா?

ருபது வயதிற்கு மேற்பட்ட அனைத்து வயது ஆண், பெண்களும் உடல் பருமனாகாமலும் அதே நேரத்தில் ஸ்டிரோக் அபாயம் ஏற்படாமலும், வாழ, கோதுமை உப்புமா, கொண்டைக்கடலை, பால், தயிர் ஆகியவற்றை தினமும் சேர்த்து வரவேண்டும். இதிலிருந்து கிடைக்கும் கால்சியமும் ஈ வைட்டமின்னும் நார்ச் சத்தும் ஸ்டிரோக், நீரிழிவு போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கும். மதிய உணவில் முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், தக்காளி, காரட், தேன், எலுமிச்சம் பழச்சாறு முதலியவற்றைத் தவறாமல் சேர்க்க வேண்டும். இதில் கிடைக்கும் ‘பி’ வைட்டமின்களும், முட்டைக்கோஸில் உள்ள அமிலமும் உடலைப் பருமனாகாமல் பார்த்துக் கொள்கிறது. சோயமாவு, ராகி மாவு முதலியவற்றை வாரம் 5 நாள் காலை உணவாகக் சேர்க்க வேண்டும். அரிசி, கோதுகை மாவு போன்றவை வாரம் ஒரு நாள் போதும்.
உடல் பலவீனமாக இருந்தால் காலையில் பழங்கள் மட்டும் சாப்பிடவும். மதியம் மொச்சையும், இரவில் பேரீச்சம்பழமும் மற்ற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் போதும். சூரியகாந்தி எண்ணெயில் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment